Wednesday, March 25, 2009

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்


நிலாவுக்கு அப்போ அஞ்சு மாசம் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். அவளுக்கு பால் கொடுத்துத் தூங்க வச்சிட்டு என் மாமியாரை பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு நானும் என் நாத்தனாரும் டைலர் கடைக்குப் போயிருந்தோம். நிலா எப்படியும் ரெண்டு மணி நேரம் தூங்குவா, அதுக்குள்ளே வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்ன்னு போணோம். நிலா முழிச்சிட்டா கால் பண்ணுங்கன்னு மாமியார் கிட்டே சொல்லிட்டுப் போனோம்.

நாங்க திரும்ப வர்ற வரைக்கும் கால் வரல, வீட்டுக்கு வரும்போது நிலாவை அவங்க ஆயா தூக்கி வச்சிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் முன்னாடி தான் முழிச்சான்னு சொன்னாங்க. நான் "நிலாக்குட்டி"ன்னு கூப்பிட்டேன். நிலா என்னை பார்க்கவே இல்ல. அவங்க அத்தைய மட்டும் பார்த்து சிரிச்சாங்க. சரின்னு நான் அவளை தூக்கினேன். "நிலாக்குட்டி" ம்ஹ்ம் "அம்முக்குட்டி" ம்ஹ்ம் அவ என்னைப் பார்க்கவே இல்ல. முகத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமா திருப்பிக்கிட்டா. முகத்தை நேரா பார்த்து கூப்பிட்டா மேடம் மேலப் பார்க்கிறாங்க. கீழ மட்டும் தான் அவ பார்க்கல லெஃப்ட், ரைட், அப்'ன்னு எல்லா பக்கமும் பார்த்தாங்க, என்னை மட்டும் பார்க்கல. சரின்னு படுக்கையிலே கொண்டுபோய் போட்டேன். முகத்துக்கு நேரா போய் கூப்பிட்டேன், அப்பவும் கண்டுக்கல. அப்புறம் "ஸாரிடா நிலாக்குட்டி, ஸாரி அம்மு ஐ லவ் யூ டா பட்டு, இனிமே அம்மா உன்னை விட்டுட்டு போகமாட்டேன்டா ஸாரிடா ஸாரிடா"ன்னு சொன்ன பிறகு தான் என்னைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சாளே.

"இத்தணூண்டு இருந்துகிட்டு இதுக்கு என்ன கோபம் பாரு"ன்னு என் நாத்தனார் மாமியாரெல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. எனக்கே கூட இன்னைய வரை அந்த இன்ஸிடெண்ட்ட மறக்க முடியல, அப்படியே மைண்ட்ல பதிவாகிடுச்சு. இப்போ தெரியுதா நான் ஏன் "ஸாரி, ஐ லவ் யூ டா"ல்லாம் சொன்னா நிலாவுக்குப் பிடிக்கும்ன்னு சொன்னேன்னு.

கொஞ்சியவர்கள் (8)

சந்தனமுல்லை on March 25, 2009 at 3:29 PM said...

கோபக்கார நிலாதான்! :-)

Unknown on March 25, 2009 at 3:31 PM said...

// கோபக்கார நிலாதான்! :-)//

வாங்க முல்லை. உங்க பின்னூட்டங்களெல்லாம் கோமதியார் படிச்சிட்டு இருக்காங்க, ஆனா இன்னும் யாருக்கும் பதிலெழுத முடியலைன்னு ஃபீலிங்ஸ்ல இருக்காங்க. விரைவில் பதில் பின்னூட்டம் போடுவாங்கன்னு நம்புவோம்.

"உழவன்" "Uzhavan" on March 27, 2009 at 8:47 AM said...

நிலவுக்கு போனவர்கள் தெரியும். ஆனால் நிலவோடு பேசியவரகளை இப்போதுதான் காணுகிறேன். நன்று :-))

FunScribbler on March 27, 2009 at 11:12 AM said...

நிலவுக்கும் கோபம் வருமா? :)

கோமதி on April 1, 2009 at 6:28 PM said...

//கோபக்கார நிலாதான்! :-)//

அப்பாவுக்கு தப்பாத பொண்ணு பொறந்திருக்கு

கோமதி on April 1, 2009 at 6:30 PM said...

//கோபக்கார நிலாதான்! :-)//

ஸாரி, அப்பாவுக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கு.

கோமதி on April 1, 2009 at 6:31 PM said...

//நிலவுக்கு போனவர்கள் தெரியும். ஆனால் நிலவோடு பேசியவரகளை இப்போதுதான் காணுகிறேன். நன்று :-))//

நிலாவோடு பேசறது மட்டுமில்லை, வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் நன்றி :-)

கோமதி on April 1, 2009 at 6:31 PM said...

//நிலவுக்கும் கோபம் வருமா? :)//

எங்க வீட்டு நிலவுக்கு வர்றது செல்லக்கோபம்

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez