Thursday, March 12, 2009

குட்டி நிலாவின் குட்டி அறிமுகம்


ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையிலும் குழந்தைங்க ஒரு இன்றியமையாத பங்கை வகிக்கிறாங்க. பொதுவா ஒரு பெண் தாய்மையாகும்போது தான் முழுமை அடைகிறாள்ன்னு சொல்லுவாங்க. நம்ம S.J. சூர்யா படத்துல கூட ஒரு பாட்டு “காலையில் தினமும் கண்விழித்தால்”ன்னு ஆரம்பிச்சு “தாயான பின்பு தான் நீ பெண்மணி”ன்னு வரும். நிலா பொறக்கறதுக்கு முன்னாடி இதெல்லாம் கேக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். முக்கியமா அந்தப் பாடலைக் கேக்கும்போது நெறைய முறை உள்ளுக்குள்ளே அழுதிருக்கேன். அந்த உணர்வுகளை குழந்தை இல்லாதவங்களால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும். ஒரு குழந்தைக்காக ரொம்பவும் ஏங்கி அது கிடைச்சதுக்கு பிறகு வர்ற சந்தோஷம் ரொம்பவே சுகமானது. நிலாவைப் பத்தி எழுதணும்ன்னு ஆரம்பிச்சு என் கதைய ஓட்டிக்கிட்டு இருக்கேன், ஸாரி ஸாரி. நிலாக்குட்டி பத்தி சொல்லணும்ன்னா நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா எல்லாத்தையும் எழுதறதுக்கு எனக்கு நேரம் கிடைக்குமான்னு தெரியல, முடிஞ்ச வரைக்கும் முயற்சிப்போம்.

நிலாவப் பத்திச் சொல்லணும்ன்னா “அவ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பாசமான வாலுப்பொண்ணு”.

அதே மாதிரி, நிலாவுக்கு உங்கள பிடிக்கணும்ன்னா மூணு முக்கியமான தகுதிகள் வேணும்.

முதல்ல உங்களுக்கு பாட்டுப் பாடத் தெரிஞ்சிருக்கணும். முக்கியமா மெலடி பாட்டுகள். அதுக்காக நீங்க பெரிய சுசிலாவா இருக்கணும்ன்னு அவசியம் இல்ல. சும்மா பாடத் தெரிஞ்சிருந்தா போதும். குறிப்பிட்டுச் சொல்லணும்ன்னா “தூளியிலே ஆடவந்த” பாட்டைப் பாடத் தெரியணும்.

ரெண்டாவது, நிலாவை சூப்பரா கொஞ்சத் தெரியணும். “என் செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி, அம்முக்குட்டி, பட்டுக்குட்டி”ன்னு கொஞ்சிட்டு பிறகு தான் நிலாவைத் தூக்கணுமே.

கடைசியா, அவங்கள தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்டணும். அது எல்லா குழந்தைக்குமே புடிச்ச விஷயம் தான்.

பொதுவா எல்லா குழந்தைகளுக்குமே பாட்டுன்னா பிடிக்கும், ஆனா நிலாவோட விருப்பம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். குத்துப்பாட்ட விட மெலடி பாட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பா. நிலாவுக்கு இசை பிடிக்கும்ங்கிறது அவ என் வயிற்றுக்குள்ளே இருக்கும்போதே எனக்குத் தெரிய ஆரம்பிச்சிடுச்சுன்னு சொன்னா நீங்க நம்புவிங்களான்னு தெரியல. நான் கர்ப்பமாகி ஆறு மாசம் ஆகியும் அசைவே இல்லாம ரொம்ப பயந்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்திலே என் வீட்டுக்காரர் எனக்கு Pregnancy CD ஒண்ணு அனுப்பி வச்சார். அதுல பாட்டெல்லாம் இருக்காது, இசை மட்டும் தான். அந்த இசையை நான் கேக்கும்போது தான் அவ முதல் முதல்ல அசைஞ்சா. உடனே அவருக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லி சந்தோஷப்பட்டேன். இப்படி, நிலாவோட இசைப்பயணம் கருவறையிலே ஆரம்பிச்சிடுச்சு.

கொஞ்சியவர்கள் (27)

அகமது சுபைர் on March 12, 2009 at 11:48 AM said...

//நிலாவோட இசைப்பயணம் கருவறையிலே ஆரம்பிச்சிடுச்சு.//

அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு..!!

சிங்கை நாதன்/SingaiNathan on March 12, 2009 at 5:54 PM said...

Me the first
Anputan
Singai Nathan

goma on March 14, 2009 at 1:16 PM said...

அருமையான அறிமுகம் நிலா குட்டிக்கு என் வாழ்த்துக்கள்.ஆசிகள்.
தமிழ்மணம் வழிகாட்டி வந்தேன்.
தாய்மையின் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பதட்டமும் சந்தோஷமும் எதுவுமே அனுபவித்தால்தான் புரியும் என்பதை அழகாகக் கூறியிருக்கிறீர் சகோதரி.
குழந்தையோடு உங்கள் பிளாக் பயணமும் வளர வாழ்த்துகிறேன்

goma on March 14, 2009 at 1:23 PM said...

தொடர்ந்து வருகிறேன் என் வீட்டில் குட்டிப் பாப்பாவின் வளர்ச்சி பார்த்து பூரிப்பது போல் நிலா குட்டியையும் வளர வளர இணைந்தே வருகிறேன்

கவிதா | Kavitha on March 14, 2009 at 1:55 PM said...

//முதல்ல உங்களுக்கு பாட்டுப் பாடத் தெரிஞ்சிருக்கணும். //

இதுல நான் பாஸு..


//ரெண்டாவது, நிலாவை சூப்பரா கொஞ்சத் தெரியணும். “என் செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி, அம்முக்குட்டி, பட்டுக்குட்டி”ன்னு கொஞ்சிட்டு பிறகு தான் நிலாவைத் தூக்கணுமே.//

நான் பெரிய எருமைகளையே கொஞ்சுவேன்..சோ இதிலியிம் நான் பாஸு... (பெரிய ல நீங்களும் ராஜாவும் கூட வருவீங்கன்னு நினைக்கிறேன்.. :)...)

//கடைசியா, அவங்கள தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்டணும். அது எல்லா குழந்தைக்குமே புடிச்ச விஷயம் தான்.
//

இது எல்லாம் எனக்கு சொல்லியே தரவேண்டாம்.. சோ இதுலையும் நானு பாஸூ..

சரி எப்ப நிலா வ என்கிட்ட கொடுக்க போறீங்க.. ?? :)

Ungalranga on March 14, 2009 at 2:06 PM said...

நம்ம நிலா அடுத்த பி.சுசீலாவாக மலர... அவளோட ஆஸ்தாங்க அண்ணன்... ரங்கனின் மனமார்ந்த, நெஞ்சார்ந்த,உளமார்ந்த வாழ்த்துக்கள்.

நிலாம்மா நீங்கதான் அவளோட இசை ஆர்வத்த நல்லா வளர்த்துவிடனும்.

பல கனவுகளுடன்
ரங்கன்

இராகவன் நைஜிரியா on March 14, 2009 at 2:32 PM said...

// அந்த இசையை நான் கேக்கும்போது தான் அவ முதல் முதல்ல அசைஞ்சா. உடனே அவருக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லி சந்தோஷப்பட்டேன். இப்படி, நிலாவோட இசைப்பயணம் கருவறையிலே ஆரம்பிச்சிடுச்சு. //

தாய் கருவுற்று இருக்கும் போது நல்ல விசயங்களை கேட்பதும், இசையை கேட்பதும், நல்லவற்றை செய்வது, நல்லவற்றை சிந்திப்பதும் மிகவும் நல்லதுங்க..

குடந்தை அன்புமணி on March 14, 2009 at 3:32 PM said...

உங்க டெம்பிளேட் சூப்பருங்க! முதன்முறையாக உங்க வலைத்தளத்திற்கு கோமா (வலைச்சரம்)அவர்களால் வருகை தந்துள்ளேன்!

குடந்தை அன்புமணி on March 14, 2009 at 3:36 PM said...

இசைக்கேட்டால் புவியே அசைந்தாடும்னு சொல்வாங்க. உங்கப் பொண்ணு மட்டும் விதிவிலக்கா என்ன? புஜ்ஜி செல்லத்தை கேட்டதா சொல்லுங்க!

Sanjai Gandhi on March 14, 2009 at 3:40 PM said...

அட அட.. என்ன ஒரு பெருமை.. இது தான் குழந்தை தாய்க்கு கொடுக்கும் அழகான பரிசு. சுத்திப் போடுங்க..:)

//ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையிலும் குழந்தைங்க ஒரு இன்றியமையாத பங்கை வகிக்கிறாங்க//

திருத்தம் : ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கைலயும்..

இங்க குடி வந்த 2 ஆண்டுகள் ஆகியும் பெரியவர்கள் யாரும் எனக்கு பழக்கமில்லை.. எங்க தெரு குட்டீஸ் சிலர் தான் என் நட்பு வட்டம்.. குழந்தைகள் எனன் செய்தாலும் அழகு தான்..

நிலாவைக் கொஞ்சறதுகான 2 தகுதிகள் இருக்கு.. முதல் தகுதிக்கும் கவலை இல்லை.. மொபைலில் பாட்டுப் போட்டு பாப்பாவை கவர் பண்ணிடலாம்.. :))

கோமதி on March 14, 2009 at 7:30 PM said...

//அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு..!!//

ஆமாம் ஆமாம் அவங்க அப்பாவுக்கு குரல் நல்லா இருக்கோ இல்லையோ அடிக்கடி பாடிகிட்டே இருப்பார் வீட்டுக்குள்ள, பாத்ரூம்குள்ளனு.;)

கோமதி on March 14, 2009 at 7:30 PM said...

//Me the first
Anputan
Singai Nathan
//

தங்கள் ஆதரவுக்கு நன்றி

கோமதி on March 14, 2009 at 7:31 PM said...

//அருமையான அறிமுகம் நிலா குட்டிக்கு என் வாழ்த்துக்கள்.ஆசிகள்.
தமிழ்மணம் வழிகாட்டி வந்தேன்.
தாய்மையின் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பதட்டமும் சந்தோஷமும் எதுவுமே அனுபவித்தால்தான் புரியும் என்பதை அழகாகக் கூறியிருக்கிறீர் சகோதரி.
குழந்தையோடு உங்கள் பிளாக் பயணமும் வளர வாழ்த்துகிறேன்//

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களை போன்றவர்களின் நல்ஆதரவவோடு நிலாவின் பயணங்கள் தொடரும்.

கோமதி on March 14, 2009 at 7:32 PM said...

//சரி எப்ப நிலா வ என்கிட்ட கொடுக்க போறீங்க.. ?? :)
//

கவிதா, ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க correct பண்ற நிலா ஒரு 30 நிமிடம் உங்க கூட இருக்குறதே கஷ்டம்.

கோமதி on March 14, 2009 at 7:32 PM said...

//நம்ம நிலா அடுத்த பி.சுசீலாவாக மலர... அவளோட ஆஸ்தாங்க அண்ணன்... ரங்கனின் மனமார்ந்த, நெஞ்சார்ந்த,உளமார்ந்த வாழ்த்துக்கள்.

நிலாம்மா நீங்கதான் அவளோட இசை ஆர்வத்த நல்லா வளர்த்துவிடனும்.
//

உங்கள் ஆசிகளூக்கு நன்றி. நிச்சயமாக நிலாவின் இசை ஆர்வத்தை வளர்த்துவிடுவோம்.

கோமதி on March 14, 2009 at 7:33 PM said...

//தாய் கருவுற்று இருக்கும் போது நல்ல விசயங்களை கேட்பதும், இசையை கேட்பதும், நல்லவற்றை செய்வது, நல்லவற்றை சிந்திப்பதும் மிகவும் நல்லதுங்க.//

ஆமாம் நீங்கள் சொல்வது மிகவும் சரி.

கோமதி on March 14, 2009 at 7:34 PM said...

//உங்க டெம்பிளேட் சூப்பருங்க! முதன்முறையாக உங்க வலைத்தளத்திற்கு கோமா (வலைச்சரம்)அவர்களால் வருகை தந்துள்ளேன்!//

டெம்பிளேட்டை டிசைன் செய்த பெருமை என் கணவர் மற்றும் கவிதா அவர்களையே சாரும்

கோமதி on March 14, 2009 at 7:34 PM said...

//இசைக்கேட்டால் புவியே அசைந்தாடும்னு சொல்வாங்க. உங்கப் பொண்ணு மட்டும் விதிவிலக்கா என்ன? புஜ்ஜி செல்லத்தை கேட்டதா சொல்லுங்க!//

ஆமாம் இசைக்கு மயங்காதவங்களே இல்லைனு சொல்லலாம். கண்டிப்பாக சொல்றேன்.

கோமதி on March 14, 2009 at 7:35 PM said...

//திருத்தம் : ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கைலயும்..

இங்க குடி வந்த 2 ஆண்டுகள் ஆகியும் பெரியவர்கள் யாரும் எனக்கு பழக்கமில்லை.. எங்க தெரு குட்டீஸ் சிலர் தான் என் நட்பு வட்டம்.. குழந்தைகள் எனன் செய்தாலும் அழகு தான்..

நிலாவைக் கொஞ்சறதுகான 2 தகுதிகள் இருக்கு.. முதல் தகுதிக்கும் கவலை இல்லை.. மொபைலில் பாட்டுப் போட்டு பாப்பாவை கவர் பண்ணிடலாம்.. :))
//

நீங்க சொல்றது ஒரு வகைல சரியாக இருக்கலாம் ஆனால் என்னை பொருத்த வரையில் ஒரு தாய்க்கு இருக்குற பங்கு மற்றவர்களை விட ரொம்ப கூடுதல். நிலாவுக்கு மொபைலில் பாட்டு போட்டு விட்டு தான் உணவே ஊட்ட முடியுது.

Arasi Raj on March 15, 2009 at 12:34 AM said...

ஆத்தாடி...பாட்டா..அது கஷ்டமாச்சே

நிலா குட்டி..இந்த அத்தை நல்லா பீலா கதை சொல்லுவேன்...அது ஒகேவா

வாழ்த்துக்கள் நிலா அம்மா ...

கோமதி on March 15, 2009 at 11:01 AM said...

//நிலா குட்டி..இந்த அத்தை நல்லா பீலா கதை சொல்லுவேன்...அது ஒகேவா//

சும்மா பாடுங்க அத்தை நீங்க பாடுறது தான் பாட்டு. இப்போதைக்கு நிலாகுட்டிக்கு பாட்டு தான் கதைலாம் கேட்க மாட்டேங்குறாங்க இன்னும் கொஞ்சம் மாசம் ஆகணும். வாழ்த்துகளுக்கு நன்றி.

இப்னு ஹம்துன் on March 15, 2009 at 2:18 PM said...

அம்மாடி,
பாட்டு பாடாட்டியும் எழுதித் தந்திடறேன். உங்க அப்பாவை பாடவெச்சிடலாம் நிலா, ஓகேயா!

குட்டி நிலா on March 15, 2009 at 2:50 PM said...

//அம்மாடி,
பாட்டு பாடாட்டியும் எழுதித் தந்திடறேன். உங்க அப்பாவை பாடவெச்சிடலாம் நிலா, ஓகேயா!//

ம்ம் ஒகே மாமா, கொஞ்சம் மெலடி பாட்டா எழுதிக் கொடுங்க

கவிதா | Kavitha on March 16, 2009 at 10:11 AM said...

//கவிதா, ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க correct பண்ற நிலா ஒரு 30 நிமிடம் உங்க கூட இருக்குறதே கஷ்டம்.//

ம்ம்...முயற்சி செய்துட்டா போச்சி.. நீங்க விடுங்க..நானாச்சி ...நிலாவாச்சி பாத்துடுவோம்.. :)

சந்தனமுல்லை on March 16, 2009 at 10:11 AM said...

சுவாரசியம்!!

கோமதி on March 16, 2009 at 5:35 PM said...

//ம்ம்...முயற்சி செய்துட்டா போச்சி.. நீங்க விடுங்க..நானாச்சி ...நிலாவாச்சி பாத்துடுவோம்.. :)//

பாருங்க பாருங்க

கோமதி on March 16, 2009 at 5:35 PM said...

//சுவாரசியம்!! //

நிசமா தான் சொல்றீங்களா?

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez