கருவறையிலேயே இசைப்பயணத்தோடு வளர்ந்த நிலாக்குட்டி due date வந்த பிறகும் அவளோட தலையை வலுக்கட்டாயமா இறக்காமலே வச்சுட்டு இருந்ததால வேற வழியே இல்லாம ஆகஸ்ட் ஐந்தாம் தேதி 2008ம் வருடம் இரவு 7:37க்கு C-section மூலமா பிறந்தாங்க. பிறக்கும்போதே மஞ்சள் காமாலையும் லேசான மூச்சுத் திணறலும் இருந்ததால அவளை தனியா குழந்தைகளை பராமரிக்கும் ஸ்பெஷல் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. நான் கண் விழிச்சுப் பார்க்கும்போது ICUல இருந்தேன். நர்ஸைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி "எனக்கு என்ன குழந்தைப் பிறந்திருக்கு?" "பெண் குழந்தை"ன்னு சொன்னாங்க, ரொம்பவே சந்தோஷமா இருந்தது.
பொதுவாவே எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். மூணு ஆண் பசங்களோடவே வளர்ந்ததாலோ என்னவோ ஆண் குழந்தைங்க மேல கொஞ்சம் ஈர்ப்பு அதிகமா இருந்தது. என் கணவருக்கோ பெண் குழந்தைகள்ன்னா ரொம்பப் பிடிக்கும். நான் conceive ஆகி இருக்கும்போது என் கணவர் கிட்டே சும்மா ஒரு பந்தயம் கட்டினேன். "நான் உனக்காக பெண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கிறேன்பா, நீ எனக்காக ஆண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கோ"ன்னு. அதே மாதிரி பெண் குழந்தை பிறந்தா நான் அவர் மேல அதிகம் அன்பு வச்சிருக்கறதாவும் ஆண் குழந்தை பிறந்தா அவர் என் மேல அதிகம் அன்பு வச்சிருக்கறதாவும் அர்த்தம்ன்னு சொல்லிருந்தேன். அந்த பந்தயத்தோட முடிவுல நான் ஜெயிச்சிட்டத நினைச்சு எனக்கு அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, கூடவே நிலாவைப் பார்க்க முடியலையேங்கிற வருத்தம் ரொம்ப அதிகமா இருந்துச்சு. எப்படியோ சீனியர் டாக்டர் கிட்டே பர்மிஷன் வாங்கி மொபைல்ல ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு வந்தார் என் கணவர். அதைப் பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி வந்துது. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல ஐந்து நாட்கள் நிலாவைப் பார்க்க முடியாம கஷ்டப்பட்டேன். என் கணவர் மட்டும் காலையும் மாலையும் விசிட் அடிச்சிட்டு வருவார். "என் கை விரலைக் கொடுத்தேன், அழகா பிடிச்சிக்கிட்டா"ன்னு சொல்லுவார். கேட்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும். இப்பவும் நிலாக்காக சும்மா சின்ன சண்டைப் போட்டாலும் "அவ என் பொண்ணு, அவளை முதல்முதலா பார்தததும் நான் தான், அவ முதல்முதலா தொட்டதும் என் கைவிரலை தான்"ன்னு சொல்லி வெறுப்பேத்துவார்.
குட்டிநிலா வந்த பிறகு லைஃப் டோட்டலா மாறிடுச்சு. தூக்கமின்மையால ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். நைட்ல்லாம் தெளிவா ஆட்டம் போடுவா, பகலெல்லாம் சூப்பரா தூங்குவா. நிலாவுக்கும் அம்மாக்கும் நடந்த போராட்டங்களெல்லாம் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம்.
Sunday, March 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கொஞ்சியவர்கள் (11)
ஒரு பிரசவம் என்பது, அன்னைக்கு மறுபிறப்பு மாதிரிங்க. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொன்னார்கள்.
குழந்தை பிறந்து 5 நாட்கள் பார்க்காமல் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயம்தாங்க. இப்போது குழந்தை அடிக்கிற லூட்டியைப் பார்க்கும் போது அந்த கஷ்டங்கள் எல்லாம் மறந்து போயிடுங்க..
// இப்பவும் நிலாக்காக சும்மா சின்ன சண்டைப் போட்டாலும் "அவ என் பொண்ணு, அவளை முதல்முதலா பார்தததும் நான் தான், அவ முதல்முதலா தொட்டதும் என் கைவிரலை தான்"ன்னு சொல்லி வெறுப்பேத்துவார். //
இஃகி...இஃகி...
// "நான் உனக்காக பெண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கிறேன்பா, நீ எனக்காக ஆண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கோ"ன்னு.//
எனக்குத் தெரிந்து நிறைய அப்பாக்கள் பெண் குழந்தை வேண்டும் என்றே ஆசைப் படுகின்றார்கள்.
நிலாமகளுக்கு தமிழ்வானில் நல்வரவேற்பு.
இனிமையான உன் நாட்குறிப்புகளால் எங்கள் நாள்களை ஆனந்தப்படுத்துவாயாக!
என் விருப்பப்பக்கங்களில் உன் நிலாக்காலமும் இனி.
//நிலாமகளுக்கு தமிழ்வானில் நல்வரவேற்பு.
இனிமையான உன் நாட்குறிப்புகளால் எங்கள் நாள்களை ஆனந்தப்படுத்துவாயாக!
என் விருப்பப்பக்கங்களில் உன் நிலாக்காலமும் இனி.//
ரொம்ப நன்றி மாமா...
//குழந்தை பிறந்து 5 நாட்கள் பார்க்காமல் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயம்தாங்க. இப்போது குழந்தை அடிக்கிற லூட்டியைப் பார்க்கும் போது அந்த கஷ்டங்கள் எல்லாம் மறந்து போயிடுங்க..//
எனக்கு அப்போ என் கஷ்டத்தை விட நிலா பட்ட கஷ்டத்தை நினைக்கும் போது தான் பாவமா இருந்துச்சு.
//எனக்குத் தெரிந்து நிறைய அப்பாக்கள் பெண் குழந்தை வேண்டும் என்றே ஆசைப் படுகின்றார்கள்.//
ஆமாம்,பெரும்பாலும் பெண் குழந்தைகள் தான் அப்பா மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார்கள் நானும் கூட அதே ரகம் தான்.
குட்டி நிலாவுக்கு எங்கள் ஆசியும் வாழ்த்துக்களும் என்ரும் உண்டு .குட்டிநிலா வந்த பிறகு லைஃப் டோட்டலா மாறிடுச்சு. தூக்கமின்மையால ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். நைட்ல்லாம் தெளிவா ஆட்டம் போடுவா, பகலெல்லாம் சூப்பரா தூங்குவா. நிலாவுக்கும் அம்மாக்கும் நடந்த போராட்டங்களெல்லாம் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம்.
பார்க்க காத்திருக்கிறோம் ஆவலுடன்
நல்லா எழுதி இருக்கீங்க...:-)
//என் கணவர் மட்டும் காலையும் மாலையும் விசிட் அடிச்சிட்டு வருவார். "என் கை விரலைக் கொடுத்தேன், அழகா பிடிச்சிக்கிட்டா"ன்னு சொல்லுவார். கேட்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்.//
பொறாமை ... நவீன் விஷயத்தில் நிறைய வரும் எனக்கும் கூட வரும்..... :)
//நல்லா எழுதி இருக்கீங்க...:-)//
(திரும்பவும்) நிசமா தான் சொல்றிங்களா?
Post a Comment