Monday, March 16, 2009

நிலாவும் அம்மாவும்


எந்த தாயாவது பச்சைக்குழந்தைக்கிட்டே கோபப்படுவாளா? “அப்படில்லாம் கோபப்படுவாங்களா என்ன, அவளுக்கு என்ன கிறுக்கா, அவ என்ன ராட்சஸியா?”ன்னு நீங்க கேக்கறதெல்லாம் என் காதுல விழுது. ஆமாம், தவமாய் தவமிருந்து பெற்ற நிலாகிட்டேயே நான் ஓரிரு சமயங்கள்ல கோபபட்டிருக்கேன். அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்ன்னு அப்போ எனக்குப் புரியல. இப்போ அதை நினைச்சுப் பார்த்தா கஷ்டமா தான் இருக்கு. பொதுவாவே எனக்கு ஒரு இரவு சரியா தூங்கலைன்னாலும் ரொம்பவே டையர்ட் ஆகிடும். நிலா வந்ததுக்கு அப்புறம் பல இரவுகள் தூங்காமலே கழிச்சிருக்கேன். அவ தினமும் சரியா பண்ணிரெண்டுலேர்ந்து ஒரு மணிக்குள்ளே முழிச்சிடுவா, அதுலேர்ந்து காலைல ஆறு ஏழு மணி வரைக்கும் தூங்காமலே இருப்பா. சில நாட்கள்ல மேடம் தூங்க ஆரம்பிக்கிறதே மூணு நாலு மணியா தான் இருக்கும். எங்க ரூம்ல எங்களுக்காக ஒரு டிவி இருக்கும், சன் மியூசிக் போட்டுவிட்டுட்டு ரெண்டு பேருமா பாட்டுக் கேட்டுட்டு இருப்போம். அப்பவும் மேடம் சுகவாசி தான், பெட்ல படுத்து பாட்டுக் கேக்க மாட்டாங்க, அம்மா மடில படுத்து தான் கேப்பாங்க.

நிலாவ தூங்க வைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவங்கள மடில போட்டு ஆட்டிக்கிட்டே பாட்டுப் பாடணும், அப்போ தான் தூங்குவாங்க. எங்க வீட்டுல நிலா முதல் பேரக்குழந்தைங்கிறதால எல்லாருக்குமே பாசம் ரொம்ப அதிகம். என் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணின்னு எல்லோருமே அவளை மடில போட்டுத் தாலாட்டுவாங்க. அதுக்காக நடுராத்திரில அவங்களை எல்லாம் எழுப்ப முடியுமா? அதுவும் எங்க அண்ணன் அண்ணி புதுசா கல்யாணம் ஆனவங்க, எங்க அப்பாவோ கடை வச்சிருக்கிறவர். அவருக்கு காலைல எழுந்து கடையத் திறக்க வேண்டிய வேலை இருக்கும், நைட் பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவார், பகல்லேயும் ரெஸ்ட் கிடையாது. எப்படியோ என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிப்பேன், முடியலைன்னா அம்மாவை எழுப்புவேன். அம்மாவுக்கும் பகல்ல வேலை அதிகமா இருந்ததால கொஞ்ச நேரம் பார்த்துப்பாங்க, அப்புறம் அப்பா தான் பார்த்துப்பாங்க. “சரிப்பா நீங்க நிலாவைப் பார்த்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு நான் போய் படுக்கவும் முடியாது, படுக்க மனசும் வராது. புள்ளைக்கு பாவம் பசி வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசனையா இருக்கும், அதனால அப்படியே பக்கத்துல சோஃபால சாய்ந்துகிட்டு கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணிப்பேன். நிறைய டைம் அப்பாவை நினைச்சா பாவமா இருக்கும். ”இன்னும் கொஞ்ச நாள் தான பார்த்துக்கப் போறிங்க”ன்னு சொல்லி சொல்லியே அவரை பார்த்துக்க வச்சாச்சு.

சரி சரி, மேட்டர்க்கு வர்றேன். நிலாகிட்டே நான் எதுக்காக கோபப்பட்டேன்னு தானே கேக்குறிங்க. நிலா தூங்காம இருந்ததுக்காக நான் என்னைக்கும் அவக்கிட்டே கோபப்பட்டது இல்லை. அவ என் பாலை குடிக்காம வம்பு பண்ணும்போது கோபப்பட்டிருக்கேன். ஆனா அவ எதுக்காக பால் குடிக்க மாட்டேங்கிறா, அவளுக்கு உடம்புக்கு எதோ பண்ணுது போலன்னுல்லாம் யோசிக்கத் தோணல. எனக்கு தூக்கமின்மை, கூடவே சி-செக்‌ஷன் பண்ணதால மடில வச்சி தொடர்ந்து ஆட்டிக்கிட்டு இருக்கும்போது வர்ற வலி எல்லாம் சேர்ந்து நிலா மேல கோபப்பட வச்சிடுச்சு. இப்போ என் நிலாக்குட்டி கிட்டே அதுக்காக ஸாரி கேட்டுக்கிறேன். “சாரிடா நிலாக்குட்டி, ஐ லவ் யூ டா பட்டு”. எங்க நிலாக்குட்டிக்கு சாரி, ஐ லவ் யூல்லாம் சொன்னா ரொம்ப பிடிக்கும் ;-) (அதுக்கு பின்னாடி ஒரு குட்டிக்கதையே இருக்கு, அதை அப்புறம் சொல்றேன்). குழந்தைங்க நிறைய விஷயங்களுக்காக அழுவாங்கன்னு அப்போ புரியல. பசிக்கு மட்டுமில்ல, நேப்பி மாத்தறதுக்கு, வயத்துவலிக்கு (அப்பா அம்மால்லாம் வயத்துவலியா இருக்கும், வுட்வார்ட்ஸ் கொடுன்னு சொல்லுவாங்க, டாக்டரை கேக்காம எதுவும் கொடுக்க மாட்டேன்னு சொல்லிடுவேன்), போட்டிருக்கிற ட்ரஸ் வசதியா இல்லைன்னா, அப்புறம் சும்மா ஜாலிக்காக இன்னும் நிறைய காரணங்கள் சொல்லலாம். அடடா, நிறைய எழுதிட்டேன்னு நினைக்கிறேன், அப்புறம் போர் அடிக்க ஆரம்பிச்சுடப் போகுது. இப்போதைக்கு ஒரு குட்டி ப்ரேக். நிலாவும் அம்மாவும் தொடரும் ........................ காத்திருங்கள்.

கொஞ்சியவர்கள் (4)

சந்தனமுல்லை on March 18, 2009 at 3:36 PM said...

ஹ்ம்ம்..நீங்க சொல்றது புரியுது! அது ஒரு வித மன அழுத்தம்/டிப்ரஷன் மாதிரி! அது அநேகமா எல்லா நியூ மதர்ஸ்-க்கும் இருக்கும்னு நினைக்கறேன்! :-)

நிலாவும் அம்மாவும் on March 20, 2009 at 10:31 PM said...

நிலான்னு பேரு வச்சாலே அப்டி தானோ என்னமோ.....எங்க நிலாவும் பால் குடிக்காம நான் நிறைய அழுதுருக்கேன்..எனக்கும் சி - செக்ஷன் தான்...

பதிவோட தலைப்பைப் பார்த்ததும் என்னடா நம்ம பேரு இங்க இருக்குன்னு முழிச்சுட்டு இருந்தேன்

கோமதி on April 1, 2009 at 6:25 PM said...

//அது அநேகமா எல்லா நியூ மதர்ஸ்-க்கும் இருக்கும்னு நினைக்கறேன்! :-)
//

ஆமா, மற்ற புது அம்மாக்கள் டிப்ரஸ் ஆகாம இருக்கறதுக்கும் இது எல்லா அம்மாக்களுக்குமே இருக்கிற அனுபவம் தான்னு சொல்லவும் தான் இந்தப் பதிவு.

கோமதி on April 1, 2009 at 6:27 PM said...

//பதிவோட தலைப்பைப் பார்த்ததும் என்னடா நம்ம பேரு இங்க இருக்குன்னு முழிச்சுட்டு இருந்தேன்//

முதல்ல பதிவோட தலைப்பை உங்க கிட்டேர்ந்து சுட்டதுக்கு ஸாரி :-).

//நிலான்னு பேரு வச்சாலே அப்டி தானோ என்னமோ.....எங்க நிலாவும் பால் குடிக்காம நான் நிறைய அழுதுருக்கேன்..எனக்கும் சி - செக்ஷன் தான்...
//

எல்லா நிலா அம்மாக்களுக்கும் ஒரே நிலைமை தான் போல.

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez