முன்பு ஒரு வலைப்பதிவில் குழந்தையின் பிறந்தநாள் கவுண்ட் டவுன் பார்த்தபோது நிலாவின் பிறந்தநாளுக்கு ஒரு மாசம் முன்னரே இப்படி ஒண்ணு நம்ம குட்டிம்மா பதிவிலும் போடணும்ன்னு நினைத்திருந்தேன். வழக்கம் போல சோம்பேறித்தனம், மறதி, அலுவலக வேலை எல்லாமும் ஒண்ணு சேர்ந்து விட்ஜெட் போட மறந்துட்டேன். நேற்று ஜெஸிலாவின் குழந்தைக்கு ஒரு வயது, இன்று வேறொரு நண்பனின் இரு குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடைவது நினைவுக்கு வந்து “அட நம்ம குட்டிம்மாவுக்கும் அடுத்த மாசம் ஒரு வயசாகப் போகுதே, இன்னும் விட்ஜெட் போடலையே” என்ற நினைவும் வந்தது. நினைவு வர்றப்போவே அதை செய்யலைன்னா பிறகு மறந்துடுவேன் (கஜினி வியாதி எனக்கும் உண்டு), அதனால மறக்காம உடனே விட்ஜெட் சேர்த்தாச்சு.
பிகு: நிலா அம்மா இப்போ சென்னையில் இருக்காங்க. மேடம் கிட்டே கணினி இல்லை, அதனால் பதிவுகள் எதுவும் எழுதல. அடுத்த மாசம் திரும்ப சவுதி பாலைவனத்திற்கு வந்த பிறகு பின்னூட்டங்களுக்கு பதில்களும், பதிவுகளும் போடுவாங்கன்னு எதிர்பார்ப்போம்.
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கொஞ்சியவர்கள் (4)
குட் அப்பா... :)
நிலாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
மோகன்
நிலாவுக்கு எனது பிறந்த தின வாழ்த்துகள்!!
ரொம்ப தாமதமா தான் பார்த்திருக்கிறேன்...அதனாலென்ன நிலா செல்லத்துக்கு எப்பவும் என்னோட வாழ்த்துக்கள் உண்டு.
அப்புறம் வரவேண்டியவங்க வந்துட்டாங்க.....இனிமே பதிவுகள் வரும் தானே?
Post a Comment