Tuesday, September 15, 2009

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் - நிலாக்காலம்


ஊருக்குப் போனதுல நிலாவோட பல இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துக்க முடியாம போனதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். என்ன தான் நான் இப்போ அதைச் சொன்னாலும் சுடச்சுட அந்தந்த விஷயங்களை பகிர்ந்துக்கும்போது கிடைக்கிற சுவாரசியமே தனி தான். அதே மாதிரி இந்த நீண்ட இடைவெளில சில பல நிகழ்வுகளை நான் மறந்தும் போயிருக்கலாம்.

குட்டிநிலாவைப் பத்தி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போல்லாம் அவளோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடவே கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. மேடம் ஒரு நிமிஷம் சும்மா இருக்கிறது இல்லை. ரொம்ப வாலுத்தனம் பண்றாங்க.

ஊருக்குப் போனதும் நிலா முதல்ல கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் 2 அல்லது 3 அடி வச்சு நடக்க ஆரம்பிச்சு டமால் டமால்ன்னு விழுவாங்க. தாத்தா நடைவண்டி வாங்கி கொடுத்ததும் அவ முகத்துல தான் எவ்ளோ சந்தோஷம். என்னமோ அவ ஒரு பெரிய கார் ஓட்டிட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங். எப்போ பாரு நடைவண்டி தான். அதை ஓட்டுறதுன்னா அவ்ளோ சந்தோஷம். நிறைய சமயம் டின்னர் ஊட்டிவிட எனக்கு நடைவண்டி தான் உதவி பண்ணிருக்கு. இப்படி சில மாசத்துக்கு முன்னாடி இங்கேயும் அங்கேயும் வேகமா தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ என்னடான்னா ததக்கா பிதக்கான்னு நடக்குறா, ஓடுறா. யப்பாஆஆஆஆஆஆ முடியலலலலலலலலலலலலலல. நிலாவோட ஒவ்வொரு விஷயங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவா பதிவு பண்ண நினைச்ச நாங்க அவ ஊர்ல உடம்பு முடியாம சோர்வா இருந்ததால அவ நடக்க ஆரம்பிச்சதெல்லாம் பதிவு பண்ண முடியாமலே போய்டுச்சு.

இப்போ நிலாக்குட்டிகிட்டே தான் எவ்ளோ மாற்றம்!! நாம எது பேசினாலும் அவங்களும் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்ல முயற்சி பண்றாங்க. நானும் என் வீட்டுக்காரரும் இனிமே கிண்டலுக்கு கூட அவ முன்னாடி திட்டிக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். மழலைச்சொல்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். அதையெல்லாம் தாண்டி நிலா சில வார்த்தைகளை ரொம்ப அழகா திருத்தமா சொல்றது ஆச்சர்யமா தான் இருக்கு.

நிலாவோடு ஒரு குட்டி இண்டர்வியூ (இதோட ஆடியோ கீழே)

1. பாப்பாவோட பேர் என்னம்மா?

ந்நிலாஆஆ

2. பாப்பாவோட அப்பா பேர் என்னம்மா?

ஆஜ்ஜா (அம்மா பேரை கேக்கக்கூடாது. சொல்றது ரொம்ப கஷ்டம். எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், என் பேரைச் சொல்ல மாட்டேங்குறியே நிலா)

3. அப்பா எங்கேம்மா போய்ருக்காங்க?

ஆசீஸ் (ஆஃபீஸ்)

4. பாட்டி பேர் என்னம்மா?

கீத்தா

5. பாப்பாக்கு என்ன புடிக்கும்?

இட்ட்ட்லீ

6. பாப்பா ஒன் டூ த்ரீ சொல்லுங்க?

ஒன் (மட்டும் நாம சொல்லணும்) டூ த்தீ

7. பாப்பா ஒரு பாட்டுப் பாடுங்க?

சா, தீஈஈஈ (தொடையில் தாளத்துடன்), க (நாம சொல்லணும்), ம, பா (அவ்ளோ தான்)

8. காக்கா எப்படி கத்தும் (கொஞ்சம் கிறுக்குத்தனமான கேள்வி தான்)?

கா கா

9. மாடு எப்படி கத்தும்?

மாஆஆஆ

10. பூனை எப்படி கத்தும்?

ய்யாஆஆவ்வ்வ்வ்

11. நாய் எப்படி கத்தும்?

வவ் வவ்

12. குரங்கு எப்படி கத்தும்?

கொர்ர்ர்ர்ர்

13. கோழி எப்படி கத்தும்?

கொக்ககொகோ

இதெல்லாம் இல்லாம நிலா மழலையோட சொல்லும் சில வார்த்தைகள்

1. பூயி (பூரி)
2. ம்ம்மை (பொம்மை)
3. ண்ண்ணீ (தண்ணி)
4. சாயி (சாரி)
5. காங்க் யூ (தாங்க் யூ - இது அவ சொல்றப்போ எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
6. மாயீ (மாமி)
7. டை (வடை)
8. ச்சாக்கி (சாக்லேட்)
9. க்க்கர் (குக்கர்)
10. ஜூஊஊஸ் (ஜூஸ்)
11. தச்சு (தயிர்)
12. ண்ண்ணா (அண்ணா)
13. க்க்கா (அக்கா)


அம்மா, அப்பா, தாத்தா, மாமா, பாட்டி, டாடி, பால், பால் (ball), பாட்டில், சட்டை இதெல்லாம் ரொம்ப க்ளியரா வர்ற வார்த்தைகள். நிலா இந்த ரெக்கார்டிங்கு அப்புறம் இன்னும் நிறைய பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதெல்லாம் கூடிய விரைவில் அடுத்தப் பதிவாக.

Get this widget | Track details | eSnips Social DNA

கொஞ்சியவர்கள் (20)

கவிதா | Kavitha on September 16, 2009 at 12:14 PM said...

Excellent!! :))) Goms a warm hug and a kiss for your patience to record such a wonderful conversation wowwwwwwww!!

its great!! Nila rocks...

buttttttttttttt.....என் பேரு சொன்னாதானே நிலா குட்டி.... அதை கேட்காம விட்டதுக்கு.. உங்களை என்ன செய்யறது... :(

கவிதா | Kavitha on September 16, 2009 at 12:18 PM said...

இதுல எனக்கு பிடிச்ச சூப்பர்ஸ்...

காங்க் யூ
ச்சாக்கி (சாக்லேட்)
ஜூஊஊஸ் (ஜூஸ்)

முத்துலெட்சுமி/muthuletchumi on September 16, 2009 at 12:27 PM said...

ஸரிகம பாடறாங்களா..? ம் பாடகி..:)

+Ve Anthony Muthu on September 16, 2009 at 12:33 PM said...

மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இனிமேல் ஏதேனும் சந்தோஷ பேட்டரி தீர்ந்து போனால்...
இங்கே வந்து ரீசார்ஜ் செய்துக்க வேண்டியதுதான்.

நிஜமா நல்லவன் on September 16, 2009 at 2:32 PM said...

நிலா சூப்பரா பேசுறாங்க:)

ஆயில்யன் on September 16, 2009 at 2:38 PM said...

மழலை குரல் கேக்கறதே ஒரு மகிழ்ச்சித்தான்!

சரிகம எல்லாம் பயங்கரமா பிராக்டீஸ் நடக்குது போல

சூப்பரூ!!!

Iyappan Krishnan on September 16, 2009 at 2:39 PM said...

சரி மாமாவோட பேரெல்லாம் சொல்லிக் குடுத்தாச்சா இல்லையா ?

சிங்கை நாதன்/SingaiNathan on September 16, 2009 at 3:20 PM said...

Very Nice :)

அன்புடன்
சிங்கை நாதன்

கோமதி on September 16, 2009 at 5:52 PM said...

கவிதா, நிலா இன்னும் நிறைய பெயர்களை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதெல்லாம் அடுத்தப் பதிவிலே வரும்

கோமதி on September 16, 2009 at 5:52 PM said...

// சந்தனமுல்லை said...
:-)//

:-)

கோமதி on September 16, 2009 at 5:53 PM said...

//ஸரிகம பாடறாங்களா..? ம் பாடகி..:)//

நிலாவுக்கு இசைன்னா ரொம்ப விருப்பம். அதான் சும்மா விளையாட்டாச் சொல்லிக் கொடுக்கிறோம்

கோமதி on September 16, 2009 at 5:55 PM said...

//இனிமேல் ஏதேனும் சந்தோஷ பேட்டரி தீர்ந்து போனால்...
இங்கே வந்து ரீசார்ஜ் செய்துக்க வேண்டியதுதான்//

கண்டிப்பா வாங்க அந்தோனி. உங்க சந்தோஷத்துக்கு நிலாவும் ஒரு காரணமாக இருப்பதில் மகிழ்ச்சி.

கோமதி on September 16, 2009 at 5:56 PM said...

//நிலா சூப்பரா பேசுறாங்க:)//

அப்போ நாங்க நல்லா பேசலையா? இருங்க என் வீட்டுக்காரர் கிட்டே சொல்றேன்.

கோமதி on September 16, 2009 at 5:57 PM said...

//சரிகம எல்லாம் பயங்கரமா பிராக்டீஸ் நடக்குது போல//

பயங்கரமால்லாம் பிராக்டீஸ் நடக்கல. அதெல்லாம் எங்க ஃபேமிலிக்கு ப்ளட்லேயே கலந்திருக்கு :-)

கோமதி on September 16, 2009 at 5:59 PM said...

//சரி மாமாவோட பேரெல்லாம் சொல்லிக் குடுத்தாச்சா இல்லையா ?//

அதெல்லாம் அடுத்தப் பதிவிலே பாருங்க

கோமதி on September 16, 2009 at 6:00 PM said...

//Very Nice :)//

நன்றி

கவிதா | Kavitha on September 16, 2009 at 6:16 PM said...

OMG !!! சிங்கைநாதன் பின்னூட்டம்... நிலா பேச்சைவிடவும் இதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கே... :))

***************
எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்..ஆளுக்காளு அவங்க அவங்க குழந்தைகள் பேசுறது பாடறது எல்லாம் ரிக்கார்ட் செய்து போடறாங்க.. அதனால நானும் ரொம்பவும் பொறாமை பட்டு.. என் குழந்தை பேசறதை ரிக்கார்ட் செய்து போடப்போறேன்... :) - யாரு டென்ஜன் மட்டும் ஆகக்கூடாது
இப்பவே சொல்லிட்டேன்..!! :))

கவிதா | Kavitha on September 16, 2009 at 6:17 PM said...

கோம்ஸ் பட் நான் தான் ஃபர்ஸ்டு. .அதனால என் பேரை ஃபர்ஸ்டு சொல்ல வைக்கனும்... சொல்லிட்டேன்.. கேக்க கொடுத்து வைக்கனுமே... ம்ம்ம்.. :))

தேவன் மாயம் on September 16, 2009 at 6:20 PM said...

1. பூயி (பூரி)
2. ம்ம்மை (பொம்மை)
3. ண்ண்ணீ (தண்ணி)
4. சாயி (சாரி)
5. காங்க் யூ (தாங்க் யூ - இது அவ சொல்றப்போ எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
6. மாயீ (மாமி)
7. டை (வடை)
8. ச்சாக்கி (சாக்லேட்)
9. க்க்கர் (குக்கர்)
10. ஜூஊஊஸ் (ஜூஸ்)
11. தச்சு (தயிர்)
12. ண்ண்ணா (அண்ணா)
13. க்க்கா (அக்கா)///

நல்லா இருக்கே! அழகுத்தமிழ் குழந்தையின் பேச்சி இன்னும் அழகு பெறுகிறது!

"உழவன்" "Uzhavan" on September 17, 2009 at 2:05 PM said...

நிலா.. அடடா என்ன ஒரு அழகான பெயர் :-)

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez