32 கேள்விகள் தொடர்ப்பதிவுக்கு என்னை அழைத்த கவிதாவுக்கு நன்றி.
கேள்விகளும் எனது பதில்களும்
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஜாதகத்தின்படி “கோ” என்ற எழுத்திலே ஆரம்பிக்கணும்ன்னு அப்படி வச்சாங்க. ம்ம் பிடிக்கும். தோழிகள் ”கோம்ஸ்” என்றும் வீட்டிலும் மற்றும் உறவினர்களும் ”கோமு” என்றும் அழைப்பார்கள். என் கணவருக்கு மட்டும் இந்தப் பெயர் பிடிக்காததில் கொஞ்சம் வருத்தம்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒரு தோழியின் வீட்டில் நிலா நாற்காலியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவள் அப்படியே தன் மீது நாற்காலியை சாய்த்துக்கொண்டு விழுந்துவிட்டாள். அவள் வலி தாங்காமல் அழுதபோது நானும் அழுதுவிட்டேன்.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டில் என் அண்ணன்கள் தம்பியை விட என் கையெழுத்து தான் நன்றாக இருக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
முருங்கைக்காய் கத்திரிக்காய் மாங்காய்லாம் போட்ட சாம்பார், பருப்பு ரசம், உருளைக்கிழங்கு வறுவல்.
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
யோசிக்க வேண்டிய விஷயம்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பாத்ரூம் ஷவரில் குளிக்கப் பிடிக்கும்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயங்கள்: எந்த மாதிரியான நபர்களிடமும் அவர்களது குணத்துக்கு ஏற்ற மாதிரி எளிதில் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன், யாரிடமும் சண்டைப் போட்டு பேசாமல் இருந்தது இல்லை.
பிடிக்காத விஷயங்கள்: நிலாவிடம் தேவையில்லாமல் கோபப்படுவது, என் கணவர் மேல் பொஸஸிவ்வாக இருப்பது, ஒருவர் மீது வரும் முதல் அபிப்ராயத்தை கடைசி வரை மாற்றாமல் இருப்பது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயங்கள்: எல்லோரிடமும் அன்பாக பழகுவது, நண்பர்களுக்காக எதையும் செய்வது, எனக்கு பிடிக்கும் என்பதற்காக விசேஷ நாள்களில் சர்ப்ரைஸ் கொடுப்பது.
பிடிக்காத விஷயங்கள்: தேவையில்லாமல் கோபப்படுவது, எப்போதும் டிவி முன்னால் அமர்ந்திருப்பது, கடலைப் போடுவது ;)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
நிலா பிறந்த பின் என் பாட்டி இல்லையேன்னு வருந்துகிறேன்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீலநிற ஆடை.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எப்போதும் சன் மியூசிக்கில் பாட்டு கேட்பது பிடிக்கும். இப்பொழுதும் சன் மியுசிக்கில் “என் செல்லப்பேரு ஆப்பிள்” பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம் அல்லது கருப்பு.
14. பிடித்த மணம்?
மழைநேர மண்வாசனை, மல்லிகைப்பூ வாசம், நிலாவிடம் வரும் பால் வாசனை.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஃபைசா காதர் - அவங்க பதிவு முன்பு படித்திருக்கிறேன். உபயோகமான வீட்டு அலங்கார குறிப்புகள் நிறைய எழுதி இருக்காங்க. அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசை.
மலர்ச்செல்வி - ரியாத்தில் நான் ரசிக்கும் பெண் எழுத்தாளர். நிறைய படித்திருந்தாலும் அலட்டல் இல்லாமல் இருப்பவர்.
கே.வி.ராஜா - என் கணவர் என்னைப் பற்றி என்ன சொல்றார்ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசை :)))))))))))))))
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அம்மாவின் குறிப்புகள் என்ற தலைப்பிலே அம்மாக்களின் வலைப்பதிவுகளில் இட்ட அனைத்து இடுகைகளும் பயனுள்ளதாக இருந்ததால் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
சதுரங்கம், இறகுப்பந்து. இப்போதைக்கு பிடித்த விளையாட்டு நிலாவிடம் “பிடிபிடிபிடி”ன்னு சொல்லி அவளை துரத்திக்கொண்டு ஓட அவள் வேகமாக தவழ்ந்து ஓடுவது, சோஃபாவின் பின்புறம் நிலாவுடன் மறைந்துகொண்டு விளையாடுவது.
18. கண்ணாடி அணிபவரா?
இல்லை
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மணிரத்னம் படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
அருந்ததீ
21. பிடித்த பருவ காலம் எது?
இளவேனிர்க்காலம்
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஒண்ணுமில்லை (சாரி அதுக்குலாம் இப்போ நேரமில்லை)
23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாதத்திற்கு ஒரு முறையாவது.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்: புல்லாங்குழல் இசை
பிடிக்காத சத்தம்: ஆம்புலன்ஸ் சைரன்
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பஹ்ரைன்
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எந்தக் குழந்தையையும் எளிதில் நண்பர்களாக்கிக்கொள்வது.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?
ஸ்விஸ், கேரளா
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
வாழ்க்கையில் எத்தகைய உயர்வு தாழ்வு வந்தாலும் ஒரே மாதிரி இருக்க ஆசை.
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஷாப்பிங் (என் கணவருக்கு பொறுமை கிடையாது)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
"Life is like an ice-cream, enjoy it before it melts"
Monday, June 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கொஞ்சியவர்கள் (10)
சொல்லப்போனால் உங்கள் ஒவ்வொரு பதிலையும் ரசித்தென்..
வேறன்ன சொல்ல?!
கோம்ஸ் - ரொம்ப நல்லா இருக்கு...
//26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எந்தக் குழந்தையையும் எளிதில் நண்பர்களாக்கிக்கொள்வது.//
இது எனக்கு ரொம்ப பிடிச்சிது..
ஹி ஹி..அதான் நான் கூட உங்களுக்கு பிரண்டா ஆயிட்டேனோ?!!
:))) (ச்சும்மா தாமாசு...நோ நோ.....டென்ஜன்)
//என் கணவருக்கு மட்டும் இந்தப் பெயர் பிடிக்காததில் கொஞ்சம் வருத்தம்.//
ராஜ்'ஐ வேற பேரு வைத்து கூப்பிட சொல்லுங்க. .சரியா போச்சி
கோம்ஸ் ஐ வேற எப்படி எல்லாம் கூப்பிடலாம் ஒரு அலசல்..
கோ.. (ஜோதிகா'வை ஜோ.. ன்னு கூப்பிடற இஃபவெக்ட் வருது தானே?)
மத்தது எல்லாம் மெயில் ல அனுப்பறேன். .பப்ளிக்கா வேண்டாம்..
//யாரிடமும் சண்டைப் போட்டு பேசாமல் இருந்தது இல்லை.//
:)) நிசமாவா? என்னை போலவேவா..
அப்பன்னா நாம இரண்டு பேரும் எப்ப சண்டை போட போகிறோம்.?!!
//மலர்ச்செல்வி - ரியாத்தில் நான் ரசிக்கும் பெண் எழுத்தாளர். நிறைய படித்திருந்தாலும் அலட்டல் இல்லாமல் இருப்பவர்.//
அவரை பற்றி உங்களுடைய குறிப்பி நல்லா இருக்கு..
எனக்கு "அலட்டல்" ன்னா என்னான்னு ஒரு பதிவு போட்டு சொல்றீங்களா..?!! :)
உங்களில் அலட்டல் பற்றிய பார்வையை தெரிஞ்சிக்கத்தான்.. :)
//"Life is like an ice-cream, enjoy it before it melts"//
எனக்கு ஒரு கேள்வி ...
ஐஸ் க்ரீம் பிடிக்காதவங்களுக்கு?!! :)))))
//பிடிக்காத விஷயங்கள்: தேவையில்லாமல் கோபப்படுவது, எப்போதும் டிவி முன்னால் அமர்ந்திருப்பது, கடலைப் போடுவது ;)//
டிவி ய வித்துடுங்க கோம்ஸ்.. :)))
கடலைப்போடுவது என்றால் என்ன? ராஜ் கடலை போடுவாங்களா? இது நியூஸ்... !!! :))
நல்ல பதில்கள் கோமதி...நானும் சீக்கிரம் பதில் சொல்கிறேன்..
\\
உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எந்தக் குழந்தையையும் எளிதில் நண்பர்களாக்கிக்கொள்வது.
\\
ஆமா இது எல்லோராலையும் முடியாதுதான்...
//நிலா பிறந்த பின் என் பாட்டி இல்லையேன்னு வருந்துகிறேன்.//
கவுண்டர் : ஆனா நான் தேடர ஆளே வேறம்மா.. இந்த 32 கேள்விகளை கண்டுபுடிச்ச ஆளு மட்டும் என் கையில கெடச்சா.. அடடடா..
கோமதி உங்கள் பதிவுகளை இப்ப தான் பார்க்கிறேன்.(ஊரில் இருந்து இன்று தான் வந்தேன்) உங்கள் 32 கேள்விகள்- தொடர்ப்பதிவு" மிகவும் சுவாரசியமாக இருக்கு.உங்கள் 15 வது கேள்வியில் என்னை இணைத்தது மிகவும் சந்தோஷம்.
//ஃபைசா காதர் (பெயரில் சிறு திருத்தம் ஃபாயிஷாகாதர்)- அவங்க பதிவு முன்பு படித்திருக்கிறேன். உபயோகமான வீட்டு அலங்கார குறிப்புகள் நிறைய எழுதி இருக்காங்க. அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசை// கட்டாயம் என்னைப் பற்றி சொல்லுகிறேன். நேரம் கிடைத்தால் எனக்கு மெயில் பண்ணுங்க(azurilcrafts@gmail.com)
Post a Comment