Tuesday, April 21, 2009

கை தட்டித்தட்டி அழைத்தாளே


ஒரு பெண் எப்பொழுது பொறுமைசாலி ஆகிறாள்ன்னு என்கிட்டே கேட்டா, கண்டிப்பா அம்மா ஆனதுக்கு அப்புறம் தான்னு சொல்லுவேன். ஏன்னா, நிலாக்குட்டி பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் பொறுமைசாலி ஆகி இருக்கேன். ஆனால், இன்னும் பொறுமைசாலி ஆக வேண்டி இருக்கு. நிலாக்குட்டி வந்த பிறகு என்கிட்டே நிறைய மாற்றங்கள் இருக்குற மாதிரி நிலாக்குட்டியும் நிறையவே மாறி இருக்காங்க. இன்னையோட நிலாக்கு எட்டரை மாசம் ஆகப் போகுதுன்னு நினைக்கும்போது ஆச்சர்யமா தான் இருக்கு. நாள்கள் ரொம்ப வேகமா ஓடுது. இந்த எட்டரை மாசத்திலே நிலாக்குட்டிக்கிட்டே எவ்ளோ மாற்றங்கள்!!!  • சுத்தமா மொட்டையா இருந்த நிலாவோட தலையிலே இப்போ முடியெல்லாம் வளர்ந்திருக்கு

  • அமைதியா இருந்த நிலாக்குட்டி இப்போ ரொம்ப வாலு ஆகிட்டாங்க (அம்மாவுக்கு தான் செம்ம வேலை வைக்கிறாங்க)

  • பொக்கையா இருந்த நிலாவுக்கு கீழே ரெண்டு பல் வளர்ந்து இப்போ மேலேயும் புதுசா ரெண்டு பல் வரப்போகுது (அம்மாவை சூப்பரா கடிக்கிறாங்க)

  • கையை வச்சு நீச்சல் அடிக்கிற மாதிரி தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ கொஞ்சம் முட்டிப்போட்டுத் தவழ ஆரம்பிச்சிட்டாங்க.

  • பொறக்கும்போது கொஞ்சம் கலர் கம்மியா இருந்த நிலா இப்போ கலராகிட்டாங்க.

  • எது பேசினாலும் பதிலுக்கு பொக்கைச்சிரிப்பு மட்டுமே சிரிக்கிற நிலா இப்போ என்ன சொல்றோம்ங்கிறத கவனமா கேட்டு ஓரளவுக்கு புரிஞ்சிக்கவும் செய்றாங்க. மூணு நாளைக்கு முன்னாடி "clap your hands நிலா"ன்னு நானும் கையைத் தட்டிச் சொல்லிக்கொடுத்தேன். கொஞ்ச நேரத்திலேயே சுலபமா கத்துக்கிட்டாங்க. உடனே திரும்பவும் செஞ்சாங்க. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி sit, standல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கேன். அப்போல்லாம் உட்கார மாட்டாங்க. இப்போ என்னடான்னா என் கையைப் பிடிச்சிக்கிட்டு சூப்பரா சொன்னதைச் செய்றாங்க. ஆனால் sit, stand செய்றப்போ வேணும்ன்னே clap your hands செய்ய மாட்டேங்கிறாங்க (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).நிலாக்குட்டிக்கு தோற்றத்திலேயும் வளர்ச்சியிலும் வர்ற மாற்றங்கள் சாதாரணமானது தான். ஆனால், பொறந்ததுலேர்ந்து அவங்க கிட்டே மாறாத விஷயங்கள்ன்னு சிலது இருக்கு, அது இன்னமும் அப்படியே தான் இருக்கு.


  • நிலாக்கு தூக்கம் வரலைன்னா பாட்டுப் பாடணும். எந்த சாப்பாடு கொடுத்தாலும் அம்மா ரைம்ஸ் இல்லைன்னா பாட்டு பாடி தான் ஊட்டி விடணும் (ரொம்ப பசில இருந்தா மட்டும் தேவையில்லை).

  • நிலா முகத்திலே யாராவது கையை வச்சா மேடம்க்கு செம்ம கோபம் வரும்.

  • யாராச்சும் உடனே தூக்கினா கொஞ்சம் சினுங்குவாங்க. கொஞ்சி பாட்டுப் பாடி சிரிக்க வச்சு தான் கரெக்ட் பண்ணணும்.

  • அவ பக்கத்திலே அம்மா அப்பா படுத்துக்கிட்டு இருக்கும்போது நடுல திடீர்ன்னு முழிச்சாலும் பொறுப்பா அவங்க அப்பாவை கொஞ்சம் கூட தொந்தரவு பண்ணாம என் மேல வந்து கைய வச்சி தட்டித் தட்டி எழுப்பி, எழுந்துக்கலைன்னா முடிய பிடிச்சு இழுத்து எழுப்புவாங்க.).இது எல்லாத்தையும் விட முக்கியமானது, அம்மா எதாவது கோபிச்சிக்கிட்டு திட்டினாலும் அடுத்த நொடியே அதை மறந்துட்டு எப்பவும் போல பாசத்தோட இருக்காங்க எங்க பாசக்கார நிலாக்குட்டி.

கொஞ்சியவர்கள் (17)

சந்தனமுல்லை on April 21, 2009 at 1:38 PM said...

:-) அழகா இருக்கு நிலா க்ராப்!

ஆயில்யன் on April 21, 2009 at 1:46 PM said...

//sit, stand செய்றப்போ வேணும்ன்னே clap your hands செய்ய மாட்டேங்கிறாங்க //

sit & stand செய்யறப்ப எனக்கும் கூட அப்படித்தான் கைத்தட்ட வரமாட்டிக்கிது :(

கொஞ்சம் மாசம் ஆகும் ! (எல்லா அம்மாக்களுமே புள்ளைக்கு ஜிம்னாஸ்டிக்கு ஈக்குவலாத்தான் டிரெயினிங்க் கொடுக்குறாங்க !)

கோமதி on April 21, 2009 at 2:01 PM said...

//:-) அழகா இருக்கு நிலா க்ராப்!//

நன்றி சந்தனமுல்லை. க்ராஃப் இன்னும் நல்லா வளரணும்.

தீஷு on April 21, 2009 at 2:28 PM said...

//ஒரு பெண் எப்பொழுது பொறுமைசாலி ஆகிறாள்ன்னு என்கிட்டே கேட்டா, கண்டிப்பா அம்மா ஆனதுக்கு அப்புறம் தான்னு சொல்லுவேன்//

உண்மைங்க. தீஷு பிறந்ததற்கு அப்புறம் எனக்கு வந்துள்ள பொறுமையைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியம். நல்ல பதிவு.

கோமதி on April 21, 2009 at 2:33 PM said...

//sit & stand செய்யறப்ப எனக்கும் கூட அப்படித்தான் கைத்தட்ட வரமாட்டிக்கிது :(//

ரெண்டையும் ஒரே நேரத்திலே செய்யச் சொல்லலை ஆயில்யன். ஒண்ணு செய்றப்போ இன்னொண்ணு மறந்திடுறாங்க, இல்லைன்னா செய்ய மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு சொல்ல வந்தேன்.

//எல்லா அம்மாக்களுமே புள்ளைக்கு ஜிம்னாஸ்டிக்கு ஈக்குவலாத்தான் டிரெயினிங்க் கொடுக்குறாங்க //

என்ன செய்றது இப்படி எதாவது விளையாட்டுக் காட்டினா தானே சாப்பிடுறது செரிக்குது (நிலாவுக்கு)

அமுதா on April 21, 2009 at 2:52 PM said...

/*ஒரு பெண் எப்பொழுது பொறுமைசாலி ஆகிறாள்ன்னு என்கிட்டே கேட்டா, கண்டிப்பா அம்மா ஆனதுக்கு அப்புறம் தான்னு சொல்லுவேன்*/
நானும் இதை வழிமொழியறேன்...

நிலாவைப் பற்றி அழகான பதிவு

" உழவன் " " Uzhavan " on April 22, 2009 at 3:03 PM said...

நிலாவை கண்முன்னாடி கொண்டுவந்து நிறுத்திட்டீங்க :-)
20 நாளே ஆன என்னோட நிலாவும் இன்னும் போகப்போக இப்படித்தான் செய்வாளோ.. நினைக்கும்போதே மனம் மகிழ்கிறது.

கவிதா | Kavitha on May 3, 2009 at 7:08 PM said...

mm..mmm kuzhanthai koncham valaruttm paa.. athukkulla. .sit stand aa ?!! entha amma'nga ellaam over imsai nga polavea.. :)) naan kooda 8-9 months la ellaam books vachi naveen kku solli tharuvean..

athu ellaam rombavea over nnu eppathaan realise pandrean.. so.. Gomu !! let us take time yaar..

free ya vedu free ya vedu free ya vedu machi !!

சென்ஷி on May 4, 2009 at 10:16 AM said...

:-))

//இப்போ என்னடான்னா என் கையைப் பிடிச்சிக்கிட்டு சூப்பரா சொன்னதைச் செய்றாங்க. ஆனால் sit, stand செய்றப்போ வேணும்ன்னே clap your hands செய்ய மாட்டேங்கிறாங்க (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)./

சிரிச்சுட்டேன்!!

கோமதி on May 4, 2009 at 11:35 AM said...

//உண்மைங்க. தீஷு பிறந்ததற்கு அப்புறம் எனக்கு வந்துள்ள பொறுமையைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியம். நல்ல பதிவு.//

நன்றி தீஷு அம்மா.

கோமதி on May 4, 2009 at 11:35 AM said...

//நானும் இதை வழிமொழியறேன்...

நிலாவைப் பற்றி அழகான பதிவு//

நன்றி அமுதா

கோமதி on May 4, 2009 at 11:36 AM said...

//நிலாவை கண்முன்னாடி கொண்டுவந்து நிறுத்திட்டீங்க :-)
//

நன்றி உழவன்.

//20 நாளே ஆன என்னோட நிலாவும் இன்னும் போகப்போக இப்படித்தான் செய்வாளோ.. நினைக்கும்போதே மனம் மகிழ்கிறது.//

நீங்களும் உங்க நிலாவைப் பற்றி எழுதுங்க :-)

கோமதி on May 4, 2009 at 11:39 AM said...

//சிரிச்சுட்டேன்!!//

ஏன் அவ்வளவு காமெடியாவா இருக்கு?

கோமதி on May 4, 2009 at 12:08 PM said...

//mm..mmm kuzhanthai koncham valaruttm paa.. athukkulla. .sit stand aa ?!! entha amma'nga ellaam over imsai nga polavea.. :)) naan kooda 8-9 months la ellaam books vachi naveen kku solli tharuvean..//

கவிதா, நான் நிலாவுக்கு தினமும் இதெல்லாம் சொல்லித் தர்றது இல்ல, முக்கியமான விஷயம் இதையெல்லாம் கஷ்டப்படுத்தி செய்ய வைக்கிறதும் இல்ல. விளையாட்டா ஒரு நாள் sit, stand சொல்லிக் கொடுத்தேன். அதை அவ ரொம்ப என்ஜாய் பண்ணிக்கிட்டு செஞ்சா. நான் சொல்லிக்கொடுத்ததை புரிஞ்சுகிட்டாங்கிறதை எல்லோர் கிட்டேயும் பகிர்ந்துக்கணும்ன்னு தோணுச்சு, அதனால தான் பதிவுல போட்டேன்.

ஒரு தொலைக்காட்சில ஓரு டாக்டர் குழந்தைகள் சைக்காலஜி பத்தி பேசுறப்போ ஒரு குறிப்பிட்ட வயசு வரை (மூணா அஞ்சான்னு சந்தேகமா இருக்கு) எவ்வளவு விஷயங்களை வேணும்னாலும் விளையாட்டா சொல்லித் தரலாமாம். ஆனா, நான் இதுவரை எதுவும் சொல்லித் தர ஆரம்பிக்கல.

கோமதி on May 4, 2009 at 12:17 PM said...

//mm..mmm kuzhanthai koncham valaruttm paa.. athukkulla. .sit stand aa ?!! entha amma'nga ellaam over imsai nga polavea.. :)) naan kooda 8-9 months la ellaam books vachi naveen kku solli tharuvean..//

கவிதா, நான் நிலாவுக்கு தினமும் இதெல்லாம் சொல்லித் தர்றது இல்ல, முக்கியமான விஷயம் இதையெல்லாம் கஷ்டப்படுத்தி செய்ய வைக்கிறதும் இல்ல. விளையாட்டா ஒரு நாள் sit, stand சொல்லிக் கொடுத்தேன். அதை அவ ரொம்ப என்ஜாய் பண்ணிக்கிட்டு செஞ்சா. நான் சொல்லிக்கொடுத்ததை புரிஞ்சுகிட்டாங்கிறதை எல்லோர் கிட்டேயும் பகிர்ந்துக்கணும்ன்னு தோணுச்சு, அதனால தான் பதிவுல போட்டேன்.

ஒரு தொலைக்காட்சில ஓரு டாக்டர் குழந்தைகள் சைக்காலஜி பத்தி பேசுறப்போ ஒரு குறிப்பிட்ட வயசு வரை (மூணா அஞ்சான்னு சந்தேகமா இருக்கு) எவ்வளவு விஷயங்களை வேணும்னாலும் விளையாட்டா சொல்லித் தரலாம்ன்னு சொன்னார். ஆனா, நான் இதுவரை எதுவும் சொல்லித் தர ஆரம்பிக்கல.

கவிதா | Kavitha on May 5, 2009 at 7:03 AM said...

mm..mmm solli thaangapa... ellaamea nalla vizhayam thaan... That is what we are being Mom's .....

but age factor is more important.. naama eppavum over enthu vaa.. irupom.. but thevaiyana samayathil athai sairomannu theriyala... we shd analyse ourself. :))

Hey wanted to tell, Ammakal valai pookal padikareengala... why dont u join with them yaar, neenga super aa ezhuthareenga.. u can also contribute na? why dont u check with Mullai on this.. atleast monthly once oru post podungapa.. romba lively aa ezhuthareenagapa.. it will help others too... try na..

கோமதி on May 5, 2009 at 9:44 AM said...

//mm..mmm solli thaangapa... ellaamea nalla vizhayam thaan... That is what we are being Mom's .....

but age factor is more important.. naama eppavum over enthu vaa.. irupom.. but thevaiyana samayathil athai sairomannu theriyala... we shd analyse ourself. :))

Hey wanted to tell, Ammakal valai pookal padikareengala... why dont u join with them yaar, neenga super aa ezhuthareenga.. u can also contribute na? why dont u check with Mullai on this.. atleast monthly once oru post podungapa.. romba lively aa ezhuthareenagapa.. it will help others too... try na..//

ம்ம் நீங்க சொல்றது சரி தான். அம்மாக்கள் எப்பவுமே கொஞ்சம் enthuவா தான் இருக்காங்க.

தினமும் படிக்கிறது இல்லை கவிதா, நேரம் கிடைக்கும்போது படிப்பேன். நீங்க எழுதின அம்மாவின் குறிப்புகளெல்லாம் படிச்சேன். உண்மையிலேயே ரொம்ப உபயோகமா இருந்தது. முக்கியமா C-section லேடீஸ்க்கு சொல்லியிருந்த எக்ஸர்ஸைஸ்ல்லாம் பார்த்தேன், இன்னும் செய்ய தான் ஆரம்பிக்கலை :-).

இப்போதைக்கு குட்டிமேடம் தவழ ஆரம்பிச்சிட்டதால கொஞ்சம் பிஸியா ஓடுது. அவ கொஞ்சம் வளர்ந்ததும் எழுதுறேன். ஆனால் நான் நல்லா சூப்பரா எழுதுறேன்னுல்லாம் சொல்லி காமெடி பண்ணாதிங்க கவிதா.

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez