Saturday, April 11, 2009

உன் கண்ணில் நீர் வழிந்தால்


நிலாக்குட்டிக்கு குளிக்கறதுன்னாலே ஜாலி தான். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப குஷி ஆகிடுவாங்க. குளிக்கறதுக்கு முன்னாடி அம்மா ஆயில் மஸாஜ்ல்லாம் பண்ணிவிட்டா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சுகமா கைய காலை நீட்டி காமிப்பாங்க. குட்டிநிலா குளிக்கும்போது ஒரே ஒரு பிரச்சனை தான் வரும். முகத்துக்கு மட்டும் சோப் போடக் கூடாது. கைய வச்சாலே சைரன் தான். இவங்க போடுற ஆட்டத்தைப் பார்க்கிறப்போ நிஜமாவே ஜான்ஸன்ஸ் பேபி சோப் போட்டா கண்ணு எரியுமோன்னு எனக்கு எப்பவும் சந்தேகம் வரும். அது உண்மையான்னு இதைப் படிக்கிற அம்மாக்கள் தான் சொல்லணும்.

இப்படி ஜாலியா போய்க்கிட்டு இருந்த நிலா குளியலுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அவங்க அப்பா பாத்டப் வாங்கிட்டு வந்தாங்க. "நம்ம புள்ள இனிமே பாத்டப்லேயே குளிக்கட்டும், நல்லா என்ஜாய் பண்ணுவா"ன்னு சொன்னார். டாய்ஸ் ஷாப்ல போய் பாத்டப் டாய்ஸ்ல்லாம் தேடிப் பிடிச்சு வாங்கிட்டு வந்தோம். அடுத்த நாள் வழக்கம் போல ஆயில் மஸாஜ்ல்லாம் பண்ணி பாத்டப்ல குளிக்கறதுக்கு குட்டிநிலா ரெடி ஆனாங்க. அவங்கள உட்கார வச்சிட்டு அப்படியே நானும் பக்கத்திலே உட்கார்ந்துகிட்டேன் (பாத்டப் உள்ளே இல்லைங்க, பாத்டப் பக்கத்திலே). முதல்ல மேடம்க்கு அழுகை, முகமெல்லாம் மாறிடுச்சு. அப்புறம் கொஞ்சம் டாய்ஸைல்லாம் பார்த்த உடனே லேசா ஒரு சந்தோஷம். எங்கேயோ புது இடத்துல நாம உட்கார்ந்துட்டு இருக்கோம்ங்கிறதால பயம் மட்டும் குறையவே இல்லை. என் நைட்டியை ரெண்டு கையால ரொம்ப கெட்டியா புடிச்சிக்கிட்டாங்க. ஆனாலும் டாய்ஸைப் பார்த்ததும் எடுத்து விளையாடணும்ன்னு ஆசை (விளையாட எங்கே போறாங்க, வாய்ல வைக்கணும்ன்னு தான் ஆசை). "பயப்படாதேடா, அம்மா கெட்டியா புடிச்சிக்கிறேன், நீ டாய்ஸ்ல்லாம் வச்சு விளையாடு"ன்னு சொன்னேன். அப்போவும் கைய எடுக்கல. அப்புறம் அவளை நான் ஒரு கையால அணைச்ச மாதிரி பிடிச்சிக்கிட்டு இன்னொரு கைல டாய்ஸ் எடுத்து கொடுத்தப்போ கொஞ்சம் விளையாடி செட் ஆனாங்க. அப்புறம் உடம்புல தண்ணி ஊத்தி சோப் போடலாம்ன்னு ஆரம்பிச்சப்போ தான் வில்லங்கமே ஆரம்பம் ஆச்சு. மேடம்க்கு ஆயில் மஸாஜ்ல்லாம் பண்ணதால சொய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்ன்னு வழுக்கி விட்டுடுச்சு. அவ்ளோ தான், அழுமை ஆரம்பம் ஆகிடுச்சு. "ஒண்ணும் இல்லடா"னு சமாதானப்படுத்தி திரும்பவும் உட்கார வச்சா என் போறாத நேரம் திரும்பவும் வழுக்கிடுச்சு. மறுபடியும் சைரன். அதுக்கு அப்புறம் எவ்ளோ சமாதானப்படுத்தினாலும் ம்ஹ்ம் செம அழுமை. ஃபுல் வால்யூம்ல அழுதாங்க. ஒண்ணும் பண்ண முடியல, "சரி ஒகேடா"ன்னு வேற வழியில்லாம மடியிலே போட்டுக் குளிப்பாட்டியாச்சு. அன்னைக்கு முழுக்க பாத்டப்பைப் பார்க்கிறப்போல்லாம் விசும்பினாங்க.

அன்னைக்கு நைட் அவங்க அப்பா வந்ததும் நடந்ததெல்லாம் சொன்னேன். "நாளைக்கும் திரும்ப ட்ரை பண்ணி அவ பயத்தைப் போக்கு"ன்னு அட்வைஸ். சரி இந்த டைம் நோ ஆயில் மஸாஜ்ன்னு முடிவு பண்ணி கூட்டிட்டுப் போனேன். பாத்டப்பைப் பார்த்ததுமே வழக்கம்போல முகம் மாறி, உள்ளே உட்கார வச்சதும் பயங்கர அழுகை. திரும்ப என்னை கெட்டியா பிடிச்சிக்கிட்டாங்க. "நிலாம்மா ஒண்ணும் ஆகாதுடா, அம்மா பக்கத்திலேயே இருக்கேன்டா"ன்னு சொல்லிச் சொல்லி சமாதானம் செஞ்ச பிறகு மேடம் ரெண்டு கையால கெட்டியா பிடிச்சிக்கிட்டே லைட்டா ஒரு குளியலைப் போட்டாங்க (அவ அப்படி பிடிக்கிறப்போ நீ தான்மா எனக்கு எல்லாம்ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சு, ரொம்ப சுகமான அனுபவம் அது). அடுத்த நாள் கொஞ்சம் பயத்தோட டாய்ஸ்ல்லாம் வச்சு விளையாடிக்கிட்டே குளிச்சாங்க. அதுக்கு அப்புறம் இங்கே சவுதி க்ளைமெட் பண்ண சொதப்பல்ல நிலாவுக்கு கொஞ்சம் கோல்டும் வந்ததால அதிக நேரம் தண்ணில விளையாட வேண்டாம்ன்னு பாத்டப் குளியலை மூட்டைக் கட்டியாச்சு.

இப்போ கோல்ட் சரியாகி திரும்ப பாத்டப் குளியல் ஆரம்பம் ஆகிடுச்சு. ஆனால், இப்போ பழைய பயம் இல்லை, ஜாலியா குளிக்கிறாங்க. அம்மாவையும் கட்டிப் பிடிக்கிறது இல்ல :-((

கொஞ்சியவர்கள் (8)

ஜெஸிலா on April 13, 2009 at 2:10 PM said...

வாழ்த்துகள் கோமதி. நிலா வந்து உங்களை எழுத வைக்கணும்னு இருக்கு போல :-)

பாச மலர் on April 14, 2009 at 6:09 PM said...

நிலாக்குட்டி பாத்டப் விளையாட்டும் சரி..அம்மாவின் வர்ணனையும் சரி..அட்டகாசம்..

கோமதி on April 15, 2009 at 7:07 PM said...

//வாழ்த்துகள் கோமதி//

நன்றி

//நிலா வந்து உங்களை எழுத வைக்கணும்னு இருக்கு போல :-)//

ஆமாம், நிலா என்னை எழுதவும் வச்சிட்டா

கோமதி on April 15, 2009 at 7:08 PM said...

//நிலாக்குட்டி பாத்டப் விளையாட்டும் சரி..அம்மாவின் வர்ணனையும் சரி..அட்டகாசம்..//

நன்றி. நிலாக்குட்டியின் பாத்டப் விளையாட்டு அட்டகாசம், ஆனா அம்மாவின் வர்ணனையுமா?

தமிழ் பிரியன் on April 15, 2009 at 7:24 PM said...

அட.. இது எங்க நிலா குட்டியா? பாத் டப்பில் குளிக்கும் அளவுக்கு பெரியவங்களா ஆயாச்சா? குட்! வாழ்த்துக்கள்!

குட்டி நிலா on April 21, 2009 at 1:57 PM said...

//அட.. இது எங்க நிலா குட்டியா? பாத் டப்பில் குளிக்கும் அளவுக்கு பெரியவங்களா ஆயாச்சா? குட்! வாழ்த்துக்கள்!//

தேங்ஸ் மாமா. நான் இன்னும் கொஞ்ச நாள்ல நீச்சல் குளத்திலேயே குளிப்பேனாக்கும் :-)

சென்ஷி on May 4, 2009 at 10:19 AM said...

நல்லா நேர்ல பார்க்குற மாதிரி உணர்வு கொடுக்குது உங்க எழுத்து.

கோமதி on May 4, 2009 at 11:31 AM said...

//நல்லா நேர்ல பார்க்குற மாதிரி உணர்வு கொடுக்குது உங்க எழுத்து.//

நன்றி சென்ஷி

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez