நிலாவைப் பற்றிய ஒரு முக்கியமான அழகான குட்டியான விஷயத்தை நான் பதிவுல போடவே மறந்துட்டேன். அதை நினைவுபடுத்திய என் கணவருக்கு நன்றி. பொதுவாவே பெண் குழந்தைகளுக்கு தான் விதம் விதமா ஆடைகள் கிடைக்குது. ஃப்ராக், மிடி, ஸ்கர்ட் & டாப், ஜீன்ஸ் & டாப், காக்ரா ச்சோளி, ஷராரா இப்படி ஏகப்பட்ட வகைகள். எவ்ளோ தான் புதுசு புதுசா உடைகள் வந்தாலும் நம்ம பாரம்பரிய பட்டுக்கு தனி மவுசு தான். அதுவும் பெண் குழந்தைகளுக்கு பட்டுப் பாவாடை கட்டினாலே ஒரு தனி அழகு வந்துடும்.
நிலாவோட முதல் பிறந்த நாளுக்காக முன்கூட்டியே பட்டுப்பாவாடை சட்டை ஊர்லேயே எடுத்துத் தைக்கலாம்ன்னு நான், என் நாத்தனார், மாமியாரோட நிலாவையும் கூட்டிக்கிட்டு நல்லிக்குப் போயிருந்தோம். அப்போ நிலாவுக்கு ஐந்து மாசம் தான் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். கடைக்காரர் எல்லா சட்டைகளையும் ஒண்ணு ஒண்ணா எடுத்துப் போட்டுக் காமிச்சுட்டு இருந்தார். அதிலே எங்களுக்கு ரெண்டு சட்டை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஒண்ணு பச்சை கலர், இன்னொண்ணு மரூன் கலர். அப்போ தான் என் மாமியார் "பேசாம இது ரெண்டுத்துல நிலாவையே ஒண்ணு செலக்ட் பண்ணச் சொல்லுவோம்"ன்னு ஒரு யோசனைச் சொன்னாங்க. அதுவும் நல்ல ஐடியா தான்னு சொல்லி அவ கிட்டே காமிச்சோம். அவ அழகா அவளோட குட்டி கையால மரூன் கலரைத் தொட்டா. சரி, பளிச்ன்னு இருக்குன்னு செலக்ட் பண்றா போலன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் கடைக்காரர் வேற கலர் சட்டைய காமிங்கன்னு அவரா ஒண்ணு எடுத்துக் கொடுத்தார். அப்பவும் அந்த மரூன் கலரை தான் தொட்டாங்க. திரும்ப இன்னும் ரெண்டு ட்ரஸோட சேர்த்துக் காட்டினோம். அப்பவும் மரூன் கலர் தான். எனக்கோ ஆச்சர்யம். சரி, அவ பக்கத்திலே மரூன் சட்டை இருக்கிறதால தான் அதை சுலபமா செலக்ட் பண்றா போலன்னு வேற மாதிரி மாத்திக் காட்டினோம். என் மாமியார் ரெண்டு கலர் சட்டைகளும், என் நாத்தனார் ரெண்டு கலர் சட்டைகளையும் கையிலே எடுத்து வச்சிக்கிட்டு மரூனை அவ கைக்கு கொஞ்சம் எட்டாத மாதிரி தள்ளி வச்சு காட்டினோம். அப்பவும் அவங்க ரெண்டு கையையும் அழகா கொண்டு போய் அதே மரூன் சட்டையிலே வச்சாங்க.
குழந்தைங்க வாக்கு தெய்வ வாக்கு மாதிரின்னு சொல்வாங்கன்னு கடைக்காரர் ஆச்சர்யப்பட்டுச் சொல்லவும், நாங்களும் கொஞ்சம் ஆச்சர்யத்தோடயே அவ செலக்ட் பண்ண அதே சட்டைய வாங்கிட்டு வந்துட்டோம். நிலா அதிர்ஷ்டக்காரங்க தான் ஐந்து மாசம் இருக்கும் போதே அவங்க சட்டையை அவங்க விருப்பப்படி எடுக்குறாங்க நானெல்லாம் காலேஜ் போற வரைக்கும் என் விருப்பப்படி சட்டை எடுத்ததே இல்லை ஹும்ம்ம்ம்..... சரி குட்டி நிலாவோட சட்டையை பார்ப்போமா?
Tuesday, May 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கொஞ்சியவர்கள் (7)
:-))
ரொம்ப அழகான டிரெஸ்!
என்னோட friend ஜனா வோட குழந்தைக்கு சேம் கலர் சேம் மாடல் பாவடை சட்டை தான் பிரசன்ட் செய்தேன்.. மேல் சட்டை மட்டும் ஃபுல் யெல்லோ வித் மெருன் பார்டர் இருக்கும். அவளுக்கு ரொம்ப அழகா இருந்தது. அவள் பெயர் கனிஷ்கா. :))
இந்த டிரஸ் பார்த்தவுடன் கனிஷ்கா நினைவு வந்துவிட்டது. :))
//ரொம்ப அழகான டிரெஸ்!//
இது finished product. நிலா செலக்ட் பண்ணது சட்டைக்கான துணியை தான்.
//இந்த டிரஸ் பார்த்தவுடன் கனிஷ்கா நினைவு வந்துவிட்டது. :))
//
நிலா செலக்ட் பண்ண ட்ரஸ் அவளுக்கு அழகா தான் இருக்கும்ன்னு தோணுது. குட்டீஸ்க்கு பாவாடை சட்டை சூப்பரா இருக்கு.
பட்டுப் பாவாடை, சட்டையில் சின்ன குழந்தைகள் கலக்குவார்கள்.. நிலாவும் தனக்கு பிடித்த கலரில் கலக்கி இருக்கிறாள்.. :)
:-) நல்லாருக்கு பதிவும் உடை-யும்!
ரொம்ப அழகா இருக்கு :-)
Post a Comment