Tuesday, March 9, 2010

வேணாஆஆஆஆ சொல்லாத


நிலா ரெண்டு மாசம் இந்தியா போனதில் பெரிய மாற்றம் அவளது பேச்சு. நிறைய பேசக் கத்துக்கிட்டாங்க மேடம். ரியாத்ல நானும் அவங்க அம்மாவும் பேசறதையும் சில நேரத்தில் வீட்டுக்கு வரும் நண்பர்கள் பேசறதையும் மட்டுமே கேட்டு வளர்ந்தவங்களுக்கு ஏகப்பட்ட சொந்தங்களும் அக்கம்பக்கமும் பேசிப் பேசி - மேடம் ஓவரா பேசுறாங்க. எதைச் சொன்னாலும் திரும்ப சொல்றது, தானாகவே எதாவது பேசறதுன்னு ஆகிட்டாங்க. இப்பொவெல்லாம் ஒவ்வொரு வார்த்தையும் நாங்களே யோசிச்சு தான் பேச வேண்டியதா இருக்கு.

ரெண்டு மூணு நாளுக்கு முன்னால் சில நண்பர்கள் வந்திருந்த நேரத்திலே கோமதி நிலா கிட்டே “அம்மு, ஆய் போய்ட்டியா?” என்று கேட்க, மேடமுக்கு செம்ம கோபம் “வேணாஆஆஆஆஆஆ கேக்காத” என்று சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நேற்று ஒரு சின்ன டேபிள்ல மேலே ஏறி குதிச்சு விளையாடிக்கிட்டு இருந்தவங்க தவறி கீழே விழுந்துட்டாங்க. அவங்க அம்மா சும்மா இல்லாம “பார்த்து இறங்கும்மா” என்று சொல்ல, “வேணாஆஆஆஆ சொல்லாத” என்று கத்தல்.

இந்த ரெண்டு விஷயத்திலேயும் மேடம் முகமும், கத்தின கத்தலையும் பார்க்கிறப்போ “என்னை ஏன் இப்படி மத்தவங்க முன்னால மானத்த வாங்குறே”ன்னு கேக்குற மாதிரியே இருந்துச்சு. மேடம் பெரிய மனுஷி ஆகிட்டு வர்றாங்க.

கொஞ்சியவர்கள் (2)

நட்புடன் ஜமால் on March 9, 2010 at 1:06 PM said...

அவங்களை இரசிக்கும் பருவம் இது தான்

என் ஜாய்

*இயற்கை ராஜி* on May 9, 2010 at 6:03 PM said...

ம்ம்.. இப்பிடி பப்ளிக்ல இதெல்லாம் சொல்றத நிலாக்குட்டி கிட்ட மாட்டி விடணுமே:-)

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez