ஒரு ஊர்ல ஒரு சேட்டை நிலா இருந்துச்சாம்
ம்ம்
அது காலைல ஈ தேய்க்க அழுவுமாம்
ம்ம்
அப்றம் குளிக்கிறப்போ சோப்பை கைல கைல எடுத்து இப்டி இப்டி தேய்ச்சுக்குமாம்
ம்ம்
அப்றம் பாலைக் குடிக்க மாட்டேன்னு அழுவுமாம்
ம்ம்ம்
ஆயா தாத்தாவை அடிக்குமாம்
என்னது அடிக்குமா?
இல்லப்பா சும்மா கொஞ்சும்
ம்ம்
லயா பாப்பா மேல ஏறி உக்காருமாம்
பேட் கேர்ள்
கதைய கேளு
ம்ம் சரி சொல்லு
எண்ணெய எடுத்துத் தலைல ஊத்திக்குமாம்
ம்ம்
லோஷனை எடுத்து கைல ஊத்தி கீழல்லாம் கொட்டுமாம்
ம்ம்
பவுடரை எடுத்து மூஞ்சுல உடம்புல கீழல்லாம் கொட்டிப் பூசுமாம்
ம்ம்
சாப்பாட்டை வாய்ல வச்சிக்கிட்டு அழுமாம்
ம்ம்
தண்ணியே குடிக்காதாம்
ம்ம்
ஜூஸ் கொடுத்தா அழுமாம்
ம்ம்
நைட்டு தூங்கப் போறப்போ கை சொப்புமாம்
ம்ம்
அவ்ளோ தான் கதை முடிஞ்சிடுச்சு, இன்னும் ஏன் ம்ம் போடுற
Wednesday, May 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
கொஞ்சியவர்கள் (9)
நிலா....
ச்சோஓஓஓ ச்வீட் :)))))
:-))))))))))))))
வெயிட் , பெஸ்ட் இஸ் எட் டு கம்
நிலா ஒரு அறிவாளி பாஸ்.
:-)))
ம்ம்ம்
ஆஹா நிலாவை வைத்து இப்படியும் கதைக் கேட்கலாமா !? நல்ல இருக்கு சகா . தொடருங்கள்
nila sonna kathaiyai lateaa ketten. ammam nila eppa varum
This bloged showed good story. I am working in towing Des Moines. It is best company and good technology provide. It is very interesting story. Thanks for sharing.
Post a Comment